ரஜினியைவிட சசிகலா அணியே சிறந்தது! சர்ச்சை நாயகனின் அதிரடி

ரஜினியைவிட சசிகலா அணியே சிறந்தது!May  

    May 25, 2017












ரஜினிகாந்தை பாஜகவில் இணைத்து அதன்மூலம் தமிழகத்தில் காலூன்ற பாஜக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஜினி ஒருவேளை அரசியலுக்கு வந்தால் அவரை தனிக்கட்சி தொடங்க விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது பாஜக.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் பாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ரஜினியை தங்கள் கட்சியில் இணைய பாஜக அழைப்பு விடுத்ததற்கு அக்கட்சியின் எம்.பி சுப்ரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரஜினிக்குப் பின்னால் பாஜக செல்வதைவிட சசிகலா தலைமையிலான அதிமுகவை பாஜகவுடன் இணைக்கலாம் என சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா விடுத்துள்ள அழைப்புக்கு அக்கட்சியின் எம்.பி-யே பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
Share on Google Plus

About utamilnews

0 comments:

Post a Comment