உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் இங்கிலாந்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
உலகின் மிகப்பெரிய விமானம் என்னும் அங்கீகாரத்தினை ‘ஏர்லேண்டர்-10’ விமானம் பெற்றுள்ளது.
ஏர்லேண்டர் விமானங்களில் இந்த ‘ஏர்லேண்டர்-10’ மூன்றாவது விமானமாகும்.







பயணிகள் பயன்பாட்டுக்கு இந்த ஏர்லேண்டர்- 10 விமானத்தைப் பயன்படுத்தலாமா என்பது குறித்த சோதனை தற்போது நிகழ்த்தப்பட்டது.
இந்தச் சோதனையில் தன் முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது ‘ஏர்லேண்டர்-10’.
இங்கிலாந்தில் உள்ள கார்டிங்டன் விமானப்படை தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்துக்கு செலுத்தப்பட்டது விமானம்.
இருபதாயிரம் அடி உயரத்தில் ஐந்து நாள்கள் தொடர்ந்து பறந்து தனது சோதனைப் பயணத்தை சாதனைப் பயணமாக நிறைவு செய்தது ‘ஏர்லேண்டர்’.
ிமானம், ஹெலிகாப்டர், விண்கலம் ஆகியவற்றின் தொழில்நுட்பங்களின் கூட்டுக்கலவையே ‘ஏர்லேண்டர்-10
தற்போது இந்தப் புதிய ரக விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், பயணிகளுக்கான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ‘ஏர்லேண்டர்’ விமானத் தயாரிப்புகளின் முதல் விமானம் அமெரிக்க ,ராணுவத்தின் உளவுத்துறையின் கீழ் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About utamilnews

0 comments:

Post a Comment